Wednesday 21 December 2011

Padithathil Pidithathu

மரபலகையில் ஓர்
அறிக்கை
மரங்களை வெட்டாதிர்கள் என்று!!!!

தண்ணீரை  கூட
சல்லடையால் அள்ளலாம்
பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருந்தால்-வைரமுத்து.

Anaathaigal

அழகான இரவுகள்
              தவறான உறவுகள்
சாலையோரம் சங்கீதம்
              குப்பைதொட்டியில் குழந்தை...!!!!!!!!!!

Sunday 11 December 2011

vaguparai

அரசர் தொட்டு
               ஆங்கிலேயன் வரை
அகிலமே கற்றறிந்தது
                அரசமரத்தடியில் தான்
பகலவன் பார்த்து
                மணல்களின் பதம்பார்த்து
மெல்ல ஊர்ந்து
                நண்பனோடு இடம்பெயர்ந்து
காகையின் கரைச்சலோடு
                விமானங்களின் இரைச்சலோடு
அரசிலை தழுவலோடு
                 ஆசானின் வாய்ச்சொல்லை
நுனிவிரல் தயாராகி
                  மண்ணில் எழுதுக்கோலமிடும்
சுவரில்லா சித்திரமாய்
                 பண்பாட்டின் வகுப்பறை


நாற்காலிகள் சூழ
                மரங்களோ மரப்பலகையாய்
மேஜைகளாய் கதவுகளாய்
                மரத்தடி வகுப்பிடம்
இன்று மரங்களின் கல்லரையாய்
                இயற்கையை தடுத்து
செயற்கையை செலுத்தி
                 வசதிகளும் வாய்ப்புகளும்
நுனிவிரல் அல்ல
                 மணல்களும் அல்ல
விரல்களின் நடுவில்
                 மைகொண்ட ஆணி
அவைகள் முத்தமிடும்
                  புத்தகத்தாள்கள்

 இப்படி

கட்டிட கருவறையில்
                  கண்சிமிட்டும் இக்கால
                                                  -வகுப்பறைகள்

Sunday 4 December 2011

Kurudanin Kuralgal

வாழ்கை ஒரு இருட்டறை
விழுந்து பார்த்தல் விழித்து கொள்வாய்
பார்பதற்கே கண்கள்
வாழ்வதற்கல்ல!!

On d way

வழிந்தோடுகிறது குடிநீர்
வாகனத்தில் வாசகம்
மழை நீரை சேமியுங்கள் என்று - தண்ணீர் லாரி.